News February 25, 2025
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

*படிக்கும் போது, முக்கியமான பாயிண்ட்ஸை அடிக்கோடிட்டு, வையுங்கள். இல்லை, வேறோரு கலர் கொடுத்து முக்கியமான பாயிண்ட்ஸை மார்க் செய்யவும் *முதல் முறை படிக்கும் போதே, பதிலுக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு படித்து விடுங்கள் * அனைத்து பாடங்களையும் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்க வேண்டாம். அது மூளையை டயர்ட் ஆக்கும் *தயவு செய்து மனப்பாடம் செய்யாதீர்கள். தைரியமாக எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!
Similar News
News February 25, 2025
சீமானுக்கு சோதனை காலமா?

நாதகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் விலகல், நடிகை விஜயலட்சுமி எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கு என அடுத்தடுத்து பிரச்னைகளில் சிக்கி வருகிறார் சீமான். இந்தச் சூழலில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைதாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள், அவருக்கு சோதனைக் காலமா? என எண்ணத் தோன்றுகிறது.
News February 25, 2025
அதிமுக மூழ்கும் கப்பல்: ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்

இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அதில் யாரும் ஏறமாட்டார்கள் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கட்சி அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கட்சியை மீட்க துரோகிகளை அகற்ற வேண்டும். 2026ல் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது என விமர்சித்துள்ளார்.
News February 25, 2025
3 வங்கிகள் வட்டியை குறைத்தன

வீட்டு, வாகன கடனுக்கான வட்டியை இதுவரை 3 வங்கிகள் குறைத்துள்ளன. வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து எஸ்பிஐ, பிஎன்பி ஆகிய வங்கிகள், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை அண்மையில் 0.25% குறைத்தன. இதையடுத்து தற்போது பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா (BOM) வங்கியும் வட்டியை 0.25% குறைத்துள்ளது. வீட்டுக்கடன் வட்டியை 8.10%, வாகன கடன் வட்டியை 8.45%ஆகக் குறைத்துள்ளது.