News May 15, 2024
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <
Similar News
News January 7, 2026
FLASH: டெல்லி விரையும் EPS

NDA கூட்டணியில் <<18785984>>மீண்டும் பாமகவை இணைத்த<<>> EPS, இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, அமித்ஷா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க உள்ளாராம். ஏற்கெனவே அதிமுக EX அமைச்சர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், கூட்டணியில் பாஜகவுக்கான இடங்கள், தொகுதிகள், OPS, TTV இணைப்பு குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News January 7, 2026
பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்

பிரபல இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான். இவர் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இந்நிலையில், இவருக்கும் டாக்டர் பிரீத்தா என்பவருக்கும் ஜன.28-ல் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிப்.1-ல் சென்னையில் வரவேற்பு நடைபெறவுள்ளது. தற்போது பிரபலங்களுக்கு தங்கர் பச்சான் அழைப்பிதழை வழங்கி வருகிறார். நாமும் வாழ்த்தலாமே!
News January 7, 2026
விஜய் எனக்கு எதிரி இல்லை: சீமான்

விஜய்யை எதிர்ப்பதற்காக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என சீமான் கூறியுள்ளார். விஜய்யுடன் தனக்கு போட்டியில்லை என்ற அவர், தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் தனக்கு எதிரி இல்லை என்றும், தான் எதிர்ப்பவர்களே தனக்கு எதிரி எனவும் பேசியுள்ளார். அந்தவகையில் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகள் தான் தனக்கு எதிரி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


