News March 18, 2024
விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 25, 2026
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News January 25, 2026
சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை; வழக்கு பதிவு

சிவகாசி – ஸ்ரீவி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி சோலைராணி கல்லூரி விழாவில் ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்ததாக கூறி கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து கண்டித்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து கல்லூரியில் முன் மாணவர் அமைப்பினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக சைலோஷ், அருள்ராஜ் உட்பட பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News January 24, 2026
விருதுநகர்: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <


