News August 4, 2024
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, நெல்லையில் உள்ள 4,88,874 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
Similar News
News December 3, 2025
நெல்லை: டிகிரி போதும்., SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை!

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
நெல்லை: கார் மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஆமூர் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (40) வள்ளியூரில் சமையல் வேலைக்கு வந்திருந்தார். இவர் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே சாலையைக் கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து வந்த கார் மோதியது. படுகாயமடைந்த ஆனந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.


