News April 25, 2024
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News January 12, 2026
நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகளை நடத்தும் RSS!

RSS நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 15-ம் தேதி முதல் இந்து சம்மேளனங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதி, வர்க்க வேறுபாடுகளை களைந்து இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. ஆன்மிகவாதிகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, சமபந்தி உணவுடன் முடியும்.
News January 12, 2026
விஜய்க்கு பல கதைகள் சொன்ன ‘பகவந்த் கேசரி’ இயக்குநர்!

விஜய்யின் கடைசி படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடி தமிழ் படம் இயக்குகிறேன் என பல கதைகளை கூறியதாகவும், ஆனால் ‘பகவந்த் கேசரி’ விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், விஜயின் கடைசி படம் எப்போதும் ரிலீஸானாலும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
புல்லட் ரயில் தாமதத்திற்கு ₹88,000 கோடி விலை!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் (மும்பை – அகமதாபாத்) 2029 டிசம்பரில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சூரத் – பிலிமோரா இடையே 2027 ஆக.15-ம் தேதி இயக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முதலில் ₹1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கொரோனா, நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், அதன் செலவுகள் தற்போது ₹1.98 லட்சமாக உயர்ந்துள்ளது.


