News October 25, 2024

கர்ப்பிணிகள் கவனத்திற்கு..

image

கர்ப்பிணிகள் படுக்கையில் எப்படி தூங்குவது என மருத்துவர்கள் தரும் ஆலோசனையை தெரிந்து கொள்வோம். கர்ப்பிணிகள் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கும்போது, பெரிய ரத்தக்குழாய்களான அயோடா, இன்ஃபிரியர் வீணாக்கேவாவில் அழுத்தம் குறையும். இதனால், கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். விளைவு, தொப்புள் கொடி வழியாக தேவையான ரத்தம் செல்வதால், குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

Similar News

News July 8, 2025

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்

image

<<16954955>>போதை பொருள் வழக்கில்<<>> கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ₹10,000 சொந்த ஜாமினிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

பாமக வேட்பாளர்களை நானே முடிவு செய்வேன்: ராமதாஸ்

image

2026 தேர்தலில் பாமக வேட்பாளர்களை முடிவு செய்வதோடு A, B படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி விட்டதால், தேர்தலில் போட்டியிட உள்ளோர் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். GK மணி, AK மூர்த்தி, சையத் மன்சூர் உசேன், புதா அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராமதாஸ் அணியில் உள்ளனர்.

News July 8, 2025

பும்ராவை எதிர்கொள்ள தயாராகுங்கள்: ENG ஹெட் கோச்

image

பும்ராவின் சவால் மிகுந்த பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கி., அணி சிறப்பான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஹெட் கோச் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-ல் இடம்பெறாத பும்ரா, லாட்ஸில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகாஷ் தீப் அபாரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளதால் இங்கி.,க்கு கடும் போட்டி எழுந்துள்ளது.

error: Content is protected !!