News October 24, 2024

சென்னை மக்களே உஷார்.. AI கேமரா வந்துருச்சு!

image

சென்னையில் AI கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. சாலை விதிகளை மீறுவது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது, மாடுகளை சாலைகளில் திரிய விடுவது போன்றவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவரின் முகத்தை வைத்தே, அவரது வோட்டர் ஐடி அல்லது ஆதார் கார்டு விவரங்களை இந்த AI கேமராக்கள் அனுப்பிவிடுமாம். இதனால் மேற்கூறிய செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News

News January 18, 2026

தருமபுரி: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News January 18, 2026

ஓசூர் ஏர்போர்ட் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு

image

ஓசூரில் ஏர்போர்ட் கட்டுவதற்கான TN அரசின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்(HAL) நிறுவனத்தின் பயிற்சிக்காக பாதுகாப்புத்துறை அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சூளகிரி அருகே பேரிகை மற்றும் பாகலூர் இடையே 2,300 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏர்போர்ட் அமைக்க அறிக்கை தயார் செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

News January 18, 2026

யாருடன் கூட்டணி? மீண்டும் பிரேமலதா ஆலோசனை!

image

திமுக, அதிமுக, தவெக என 3 வாய்ப்புகள் இருப்பதால் எந்த பக்கம் செல்வது என முடிவெடுக்காமல் பிரேமலதா யோசனையில் உள்ளார். அதனால் தான் கடந்த 9-ம் தேதி கூட்டணி முடிவை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி தேமுதிக அலுவலகத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், முக்கிய நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!