News September 13, 2024
பாஸ்போர்ட் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், செப். 17ஆம் தேதிக்கான அனைத்து Appointmentகளையும் செப். 16க்கு மாற்றியுள்ளது. இது குறித்த அரசின் செய்தி குறிப்பில், மிலாடி நபி செப். 17ஆம் தேதி கொண்டாட உள்ளதாகவும், இதனால், அன்றைய தினத்திற்கான பாஸ்போர்ட் Appointmentகளை முன்கூட்டியே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான SMS விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
டெஸ்லாவின் முதல் முழுநேர சேவை மையம் தொடக்கம்

டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் முதல் முழுநேர விற்பனை மையத்தை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் கஸ்டமர்கள் ஆலோசனைகள், புக்கிங், டெஸ்ட் டிரைவ் சேவைகளை பெறலாம். முன்னதாக, மும்பை மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்ட மையங்கள் காட்சிப்படுத்துதல் மையங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் தனது 2 ‘Y’ வேரியண்ட் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
News November 27, 2025
57 வயதில் இரட்டை குட்டி போட்ட அனார்கலி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வு கவனத்தை ஈர்த்து வருகிறது. 57 வயதான அனார்கலி என்ற யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. 2 குட்டிகளும், 3 மணிநேர இடைவெளியில் பிறந்துள்ளன. மேலே, இரட்டை குட்டிகளுடன் அனார்கலி இருக்கும் போட்டோக்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 27, 2025
‘அஞ்சான் 2’ சம்பவம் இருக்கு.. லிங்குசாமி கொடுத்த அப்டேட்

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவ.28ம் தேதி ரீ-ரிலீசாகும் நிலையில், இயக்குநர் லிங்குசாமி ‘அஞ்சான் 2’ அப்டேட் கொடுத்துள்ளார். படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Re-edited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார். சூரியின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரீ-ரிலீசிற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி ‘அஞ்சான் 2’ பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.


