News April 30, 2024
எண்ணெய் நீராடுவோர் கவனத்துக்கு

உடல்சூட்டைத் தணிக்க எண்ணெய் நீராடுவது பொதுவான வழக்கம். இப்படி எண்ணெய் நீராடல் மேற்கொள்வதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. உடல்வெப்பத்தை தணிக்க நாள்தோறும் எண்ணெய் நீராடக்கூடாது, அப்படி நீராடினால் குளிர் காய்ச்சல் போன்ற பின்விளைவு ஏற்படும். தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து நீராடக் கூடாது. அப்படி நீராடினால், காதுவலி, முகவீக்கம், சைனஸ் போன்றவை ஏற்படக்கூடும்.
Similar News
News March 7, 2026
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி <<19320282>>மாணவி பாலியல்<<>> வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட மாணவிக்கு ₹7 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
News March 7, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், எப்போது உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், மகளிருக்கான திட்டங்களை குறிப்பிட்டு CM மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையாக ₹2,000 வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
News March 7, 2026
கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்த HDFC

HDFC வங்கி லோன் வட்டி விகிதங்களை சற்று குறைத்துள்ளதால், லோன் வாங்கியவர்களுக்கு EMI குறைய வாய்ப்பு உள்ளது. MCLR அடிப்படையில் ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன் வாங்கியவர்களின் வட்டி செலவு குறையும். இதனால் EMI அல்லது லோன் காலம் குறையும். முந்தைய MCLR வரம்பு 8.25%–8.60%; தற்போது 8.15%–8.55% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.


