News August 4, 2024

ஆன்லைனில் பழைய போன் வாங்குவோர் கவனத்துக்கு… (2/2)

image

போனில் சிம்கார்டு போட்டதும் விரைந்து வந்து போலீஸ் போனை பறிமுதல் செய்வதோடு, உங்களையும் விசாரணைக்கு அழைத்துச்செல்லும். போலீசிடம் உண்மையை தெரிவித்து நிரபராதி என நிரூபித்து மீள்வதற்குள், போதும் போதும் என்றாகிவிடும். ஆதலால் பழைய போனை வாங்கும்போது, அவர் உண்மையான உரிமையாளரா? என்பதை உறுதிசெய்வது அவசியம். இல்லையெனில், குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சிக்கலில் சிக்குவீர்கள்.

Similar News

News January 25, 2026

30,000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான்

image

தனது நிர்வாக கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், மொத்தமாக 30,000 கார்ப்பரேட் பணியிடங்களைக் குறைக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த 2 வாரங்களில் தலா 15,000 ஊழியர்கள் வெளியேற உள்ளனர். இது அமேசான் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவன சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி கூறுகையில், தேவையற்ற நிர்வாக அடுக்குகளை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என கூறியுள்ளார்.

News January 25, 2026

நோ காஸ்ட் EMI… எச்சரிக்கும் நிபுணர்கள்!

image

நம்மில் பலரும் ‘No Cost EMI’ மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கினால், வட்டி இருக்காது என நினைக்கிறோம். ஆனால், பொருட்களின் விலையில் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக, செயலாக்க கட்டணம் + ஜிஎஸ்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக கால EMI காரணமாக, கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரித்து CIBIL ஸ்கோர் குறையலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

News January 25, 2026

பாரதியார் பொன்மொழிகள்

image

*எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல் செய்வது துணிந்து செய். *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *மனதில் உறுதி வேண்டும்.

error: Content is protected !!