News June 25, 2024
காபி குடிக்காதவர்கள் கவனத்திற்கு…

காபி குடிப்பவர்களை விட, குடிக்காதவர்கள் இறப்பதற்கு 1.6 மடங்கு அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிஎம்சி பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் காபி குடிக்காமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் இறப்பதற்கு 60% வாய்ப்புள்ளதாகவும், நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் இருந்து காபி பாதுகாப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 22, 2025
₹95000000000… அம்மாடியோவ்!

நிதி மோசடி மற்றும் நீதிமன்ற ஆணைகளை பின்பற்றாதது ஆகிய குற்றங்களுக்காக, அமெரிக்க நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 1.07 பில்லியன் டாலர் (₹9500 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பைஜூஸின் அமெரிக்க கிளையான பைஜூஸ் ஆல்பா நிறுவனத்தின் பணம், மோசடியாக வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் நடந்துவந்த வழக்கில் தான் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
News November 22, 2025
95.78% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

தமிழகத்தில் நவ.4-ல் தொடங்கிய SIR படிவங்கள் வழங்கும் பணிகளை, டிச.4-க்குள் முடிக்க வேண்டும் என்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக ECI தெரிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
News November 22, 2025
பிரபல பாடகர் காலமானார்.. திரையுலகினர் சோகம்

‘Paper Te Pyaar’ பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமான பஞ்சாப் பாடகர் ஹர்மன் சித்து(37) சாலை விபத்தில் காலமானார். காரில் அவரது சொந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, லாரியில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், ஹர்மன் சித்துவின் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே அவரும் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


