News February 13, 2025

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிப்.17 முதல் ரூல்ஸ் மாறுது..

image

FASTagஇல் புதிய மாற்றங்கள் வரும் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், டோல்களைக் கடப்பதற்கு முன்பு உங்கள் FASTag அக்கவுண்டில் போதிய பேலன்ஸ் இல்லை எனில் பிளாக் லிஸ்ட்டுக்கு செல்லும். பின்னர் வாகனத்திற்கு இரு மடங்கு ஃபைன் கட்ட நேரிடும். இதைத் தவிர்க்க உங்கள் கணக்கில் போதுமான இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் KYC விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. PLEASE SHARE IT

Similar News

News February 13, 2025

‘ஆஸ்கர்’ நடிகர் மீது பாலியல் வழக்கு

image

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸ் மீது இங்கிலாந்து நடிகை ஒருவர் பாலியல் வழக்குத் தொடுத்துள்ளார். அமெரிக்கன் பியூட்டி, யுசுவல் சஸ்பெக்ட்ஸ் படங்களுக்காக 2 முறை ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின். அவர் மீது 2017இல் மீ டு இயக்கத்தில் முதலில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மேலும் பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது லண்டன் கோர்ட்டில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

News February 13, 2025

BREAKING: தமிழக அமைச்சரவையில் மாற்றம்

image

TN அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாகாவையும் பொன்முடி இனி கவனிப்பார். CM ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

டீ விற்றால் தினசரி ரூ.7,000 வருமானம்: எங்கே தெரியுமா?

image

உ.பி. கும்பமேளாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்களிடம் டீ விற்று, நாளொன்றுக்கு ₹7,000 வருமானம் ஈட்டுவதாக இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் மூலதனச் செலவு ₹2,000 போக, லாபம் மட்டும் ₹5,000 நிற்பதாக அவர் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் அவர் ₹1.50 லட்சம் வருமானம் ஈட்டுவார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என சும்மாவா சொன்னார்கள்.

error: Content is protected !!