News May 2, 2024
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில் எல்லாவற்றையும் ஒருமுறை, முக்கியமாக ரேடியேட்டரை சரி பார்ப்பது அவசியம். அதுமட்டுமல்ல, வெயிலில் வேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
Similar News
News November 16, 2025
பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கும் திமுக: உதயநிதி

நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய ஒரே கட்சியாக திமுக திகழ்கிறது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படை கொள்கை, வலுவான கட்டமைப்பு ஆகிய 3 விஷயங்கள் இருந்தால் மட்டுமே மக்களால் ஏற்கப்பட்டு வளர்ச்சியை அடைய முடியும். மூன்றும் உள்ள திமுக 75 ஆண்டுகள் கடந்தும், வலுவான கொள்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

மக்கள் இயக்குநர் என்று போற்றப்பட்ட திரைப்பட இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடலுக்கு கம்யூ., கட்சியின் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்களும், சேரன் உள்ளிட்ட இயக்குநர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு, சொந்த ஊரான திருவண்ணாமலை நெய்வானத்தம் கிராமத்தில் இன்று நடைபெறவிருக்கிறது.
News November 16, 2025
Apple CEO பதவியில் இருந்து விலகுகிறாரா டிம் குக்?

Apple CEO-வாக இருக்கும் டிம் குக் அடுத்த ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14 ஆண்டுகளாக CEO-வாக இருக்கும் இவருக்கு, 65 வயதாகிவிட்டது. இதனால் அவர் ஓய்வு பெறலாம் என பேசப்படுகிறது. அத்துடன் இன்னும் சிலருடைய பதவிகளை மாற்ற திட்டம் இருக்கிறது என்கின்றனர். மேலும், நிறுவனத்தின் Vice President-ஆக இருக்கும் ஜான் டெர்னஸ் அடுத்த CEO-வாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


