News March 18, 2024
”கவனத்தை ஈர்க்கும் தென்காசி”

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி தொகுதி. கடந்த தேர்தலில் சுமார் 28 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக திமுக (தனுஷ்) வெற்றிபெற்றது. இந்த முறை அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பாஜக சார்பில் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட வாய்ப்புள்ளதால், திமுகவின் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.
Similar News
News October 14, 2025
International Roundup: நாட்டை விட்டு தப்பி ஓடிய மடகாஸ்கர் அதிபர்

*மடகாஸ்கரில் இளைஞர்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *மெக்ஸிகோ வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. *டிரம்ப்பை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். *பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சொனாரோ வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
News October 14, 2025
காமெடியனாக வாய்ப்பு தந்தவர் படத்தில் கதாநாயகன்

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகர் சூரிக்கு, ‘பரோட்டா சூரி’ என்ற அடைமொழி கொடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் அடுத்தடுத்து இயக்கிய ‘நான் மகான் அல்ல’, ‘ஜீவா’, ‘பாண்டிய நாடு’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களை தந்தார். இவர் தற்போது சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூரியே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 14, புரட்டாசி 28 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:31 AM -9:00 AM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: தேய்பிறை அஷ்டமி விரதம் ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.