News March 23, 2025
‘PM கிசான்’ ₹6,000 பெறும் விவசாயிகளின் கவனத்திற்கு..

மத்திய அரசின் ‘PM Kisan’ திட்டப் பயனாளிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனுடன் அரசு கள அலுவலர்கள் (அ) இ-சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் 9,59,25,578 பேரும், தமிழகத்தில் 21,94,651 பேரும் பயன்பெறுகின்றனர்.
Similar News
News March 31, 2025
FCI-இல் 33,566 காலியிடங்கள்.. விரைவில் அறிவிப்பு

FCI-இல் 33,566 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் 1 முதல் 4 வரையிலான பிரிவுகளைச் சேர்ந்தது ஆகும். இதற்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு, @fci.gov.in. தளத்தில் இந்த மாதம் வெளியாக இருப்பதாகவும், அதில் கல்வி தகுதி, வயது தகுதி உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
News March 31, 2025
லீக் செய்தவர் பற்றி ஏன் பேசவில்லை.. நடிகை கேள்வி!

‘சிறகடிக்க ஆசை’ நடிகையின் ‘பிரைவேட்’ வீடியோ எனக் குறிப்பிட்டு வெளியான வீடியோக்களை பற்றி சம்மந்தப்பட்ட நடிகை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரைக்கு பின் மறைந்து கொண்டு, இதைப் பரப்பியவர் பற்றி ஏன் யாரும் பேசவில்லை. இதைப் பரப்புவதன் மூலம், எல்லா ஆண்களும் Predators என்பதை நிரூபிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை அடுத்து, அதை லீக் செய்தவர் யாராக இருக்கும் என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
News March 31, 2025
பிரபல அரசியல் தலைவருக்கு 4 ஆண்டு சிறை?

பிரான்ஸின் பிரபல வலதுசாரி அரசியல் தலைவரான லீ பென்-ஐ குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியை முறைகேடாக கட்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அரசுப் பதவிவகிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர் 2027 அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.