News July 11, 2024
கிரெடிட் கார்டு பயனாளர்கள் கவனத்திற்கு…

கிரெடிட் கார்டுகளுக்கு வெவ்வேறு பெயர்களில் வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அவை என்னென்ன? 1) ஜாயினிங்- வருடாந்திர கட்டணம் 2) நிதிக் கட்டணம் (Finance Charges) 3) கேஷ் அட்வான்ஸ் கட்டணம் 4) Surcharge கட்டணம் 5) வெளிநாட்டு நாணய மாற்று கட்டணம் (Forex Markup Fee) 6) கார்டு மாற்று கட்டணம் 7) வரம்பு மேல் கட்டணம் (Over Limit Fee) ஆகியவை ஆகும்.
Similar News
News November 20, 2025
மார்பிங் செய்யப்பட்ட போட்டோ.. கீர்த்தி வேதனை

தனது போட்டோவை AI-ல் எடிட் செய்து பரப்பியது தன்னை வெகுவாக காயப்படுத்தியதாக நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த போது, உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்ததாகவும், அது பொய் என்பதை கண்டுபிடிக்கவே சில நிமிடங்கள் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், AI தற்போது பூதாகரமான பிரச்னையாக மாறி வருவதாகவும், மனிதர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம்.. SCAM ALERT

பிஹாரில் NDA கூட்டணி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக, அனைவருக்கும் 3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம் என PM மோடி அறிவித்திருக்கிறாராம். இப்படியொரு செய்தி வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது. இது உண்மையில்லை என மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உஷாரா இருங்க, எந்த லிங்க்கையும் கிளிக் பண்ணாதீங்க மக்களே!
News November 20, 2025
தலைவராகும் முன் என்ன செய்தனர்? PHOTOS

பிரபல உலக தலைவர்களில் பலரும் தங்களது ஆரம்பகால வாழ்க்கையை சிறியதாக தொடங்கி, இன்று பெரிய தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அவர்கள், ஆரம்பத்தில் என்ன வேலை செய்தனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்படுத்திய தகவல் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


