News August 9, 2024
கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தொலைவிலுள்ள பொருளை, 20 விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவது அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். மின்னணு திரைகளின் வெளிச்சத்தை முடிந்த அளவு குறைத்து வைக்கலாம். நள்ளிரவு கடந்து கம்யூட்டரில் வேலை செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
Similar News
News October 20, 2025
நடிகர் அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘எல்லம்மா’ படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறாராம். பல்வேறு முன்னணி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், நடிக்க ஆசையிருப்பதை சில பேட்டிகளில் தேவி ஸ்ரீபிரசாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.
News October 20, 2025
தீபாவளிக்கு ஆட்டுக்கால் பாய செய்ய ரெடியா?

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காயை சேர்ந்து, வேக வைத்த ஆட்டுக்காலை தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால் பாய ரெடி.
News October 20, 2025
WORLD ROUNDUP: பிலிப்பைன்ஸ் கனமழையில் 5 பேர் பலி

*இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
*பிலிப்பைன்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலி
*ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
*உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு இரண்டாவது இடம்