News April 13, 2024
கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தொலைவிலுள்ள பொருளை, 20 விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். மின்னணு திரைகளின் வெளிச்சத்தை முடிந்த அளவு குறைத்து வைக்கலாம். நள்ளிரவு கடந்து கம்யூட்டரில் வேலை செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
Similar News
News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 26, 2025
பூத் கமிட்டி என்றால் என்ன?

அரசியல் கட்சியின் தலைவர், மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் என்ற வரிசையில் கடைசியாக இருக்கும் குழுதான் பூத் கமிட்டி. தேர்தல் நேரங்களில் இவர்கள் வீடு வீடாக சென்று தங்களது கட்சிக்கு வாக்குகள் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவார்கள். 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் 68,321 பூத்கள் அமைக்கப்பட்டன. ஒரு பூத்துக்கு 10 பேர் கமிட்டி என்று வைத்துக் கொண்டால் கூட 6.8 லட்சம் பேர் ஒரு கட்சிக்கு பூத் வேலை செய்யத் தேவை.
News April 26, 2025
ரீ ரிலீஸ் லிஸ்ட்டில் விஜயின் ப்ளாக்பஸ்டர் படம்

அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவின் காக்க காக்க படங்களை ரீ ரிலிஸ் செய்யவுள்ளதாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட விஜய்யின் சச்சின் அப்போது வெளியானதை விட, தற்போது 10 மடங்கு லாபம் எனக் கூறிய தாணு, 2026-ல் தெறி, ரஜினியின் கபாலி ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். வேறு எந்தப் படத்தை ரீ ரிலிஸ் செய்யலாம் என நினைக்கிறீர்கள்?