News August 21, 2024
காஃபி குடிப்பவர்கள் கவனத்திற்கு..!

அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியால் வெளியிட்ட ஆய்வின்படி, மிதமான காஃபி நுகர்வு, ஒரு நாளைக்கு 2 – 3 கப் வரை காஃபி குடிப்பது, இதய நோய்க்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புடையது மற்றும் ஆயுட்காலம் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் அதிகப்படியான காஃபின் உட்கொள்வது நடுக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது. நன்றாக தூங்க விரும்புவர்கள் இரவு காஃபியை தவிர்க்கலாம்.
Similar News
News March 14, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 14, 2026
ரவி மோகனுக்கு பதில் கேள்வி எழுப்பிய ஆர்த்தி

விவாகரத்துக்கு முன்பே கெனிஷா – ரவி இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். அவர் அண்மையில், பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஆண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது Ex மனைவி ஆர்த்தி, இதுவே விவாகரத்துக்கு முன் ஒரு பெண், வேறு ஒரு ஆணுடன் மேட்சிங் உடையில்சென்று, பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என கூறினால் இந்த உலகம் ஏற்குமா என பதிவிட்டுள்ளார்.
News March 14, 2026
இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

இந்தியாவின் 2 LPG டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு உள்ளதாகவும், பொதுவான நலன்கள் & நம்பிக்கை இருப்பதாகவும் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி கூறியுள்ளார். இந்திய தரப்பில் இருந்து ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக ஏற்பட்ட இந்த முன்னேற்றத்தால், LPG தட்டுப்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


