News September 9, 2024
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்ய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். myAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்.14. அதன்பிறகு, ஆதார் அட்டையை புதுப்பிக்க, நீங்கள் ₹25 கட்டணம் செலுத்த வேண்டும்.
Similar News
News August 19, 2025
பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையப் போகிறது..!

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியை குறைக்கப் போவதாக PM மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி, 28%, 18% ஜிஎஸ்டி வரம்புகளில் இருக்கும் பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக, ₹40,000 மதிப்புள்ள மின்னணு பொருட்களின் விலை ₹4,000 வரை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT
News August 19, 2025
Photographer-களை போட்டோ பிடித்த ‘Photographer’ ஸ்டாலின்!

வெயில், மழை என எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், உழைத்து வரும் போட்டோகிராபர்களை கொண்டாடும் விதமாக இன்று உலக போட்டோகிராபர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்த செய்தியானாலும், அது நமக்கு முதலில் கிடைப்பது போட்டோ வடிவில்தான். எப்போதும், போட்டோ எடுத்து திரைக்கு பின்னால் மட்டுமே நிற்பவர்களை, நேரில் வரவழைத்த CM ஸ்டாலின், அவர்களை போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
News August 19, 2025
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அக்சர் படேல், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் யாரை மிஸ் பண்ணுறீங்க?