News August 11, 2024
18 வயது முடிந்தவர்கள் கவனத்திற்கு..

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆக.20 முதல் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2025 ஜன.1க்குள் 18 வயது நிறைவடைவோரும் இப்போது வாக்காளர்களாக பதிவு செய்யலாம். அக்.29க்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவ.28 வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.6ல் வெளியிடப்படும்.
Similar News
News December 6, 2025
BREAKING: இந்தியா பந்துவீச்சு

தெ.ஆப்., அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கோலி, ருதுராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, குல்தீப், ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரை பறிகொடுத்த நிலையில், இந்தியா கடைசி போட்டியான இன்று வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கவுள்ளது.
News December 6, 2025
முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.
News December 6, 2025
மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.


