News February 27, 2025
சீமான் வீட்டு காவலாளி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

சீமான் வீட்டுக்கு போலீசார் இன்று சம்மன் அளிக்கச் சென்றனர். ஆனால் சீமான் இல்லாததால் வீட்டுக்கு வெளியே அதை போலீசார் ஒட்டினர். இதைக்கண்ட காவலாளி, பணியாளர்கள் அதை கிழித்தனர். இதை பார்த்த போலீசார், அவரை பிடிக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 8, 2026
பைனலில் வென்றால் எவ்வளவு பரிசு?

T20 WC தொடருக்காக ICC மொத்தம் ₹120 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹27.48 கோடியும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹14.65 கோடியும் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த SA, ENG அணிகளுக்கு தலா ₹7.24 கோடியும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ₹3.48 கோடியும், போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கு தலா ₹2.29 கோடியும் கிடைக்கும்.
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT


