News March 18, 2025
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி: சோனியா

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க BJP அரசு முயற்சி செய்து வருவதாக காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், ஒரு நாள் ஊதியத்தை ₹400ஆக உயர்த்த வேண்டும் எனவும், வேலை நாட்களை 100லிருந்து, 150ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 18, 2025
பெரியார் குறித்த பேச்சு: சீமான் மனு தள்ளுபடி

பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வழக்கு எண்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்ட எந்த தகவலும் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
News March 18, 2025
என் வாழ்க்கை மாறிவிட்டது: ஹர்திக் பாண்ட்யா

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்பட்டவர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ரசிகர்களின் அன்பை அவர் மீண்டும் பெற்றிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், என்னை சுற்றி நடந்த தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கடினமாக உழைத்தேன். டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பு, எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனக் கூறினார்.
News March 18, 2025
ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?