News January 19, 2025
அரசியலமைப்பு மீது தாக்குதல்: ராகுல்

RSS அமைப்பு அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற மோகன் பகவத் பேச்சை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். பிகாரில் நடத்தப்பட்டதை போல், போலி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், IND முழுவதும் முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 10, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று காலை வர்த்தகத்தில் <<19333418>>பெரிய அளவில் குறைந்து<<>> மீண்டும் மாலை நேர வர்த்தகத்தில் 1 அவுன்ஸ் $5,170-ஐ கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி $35 டாலர்கள் குறைந்து $5,135 ஆக உள்ளது. அதேநேரம், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இந்திய சந்தையில் இன்று வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
News March 10, 2026
கோடையில் உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்கனுமா?

✦டியூப்லைட் & குண்டு பல்புகளுக்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்துங்கள் ✦முடிந்தவரை AC வெப்பநிலையை 24-26°C க்கு இடையே வைத்துக்கொள்ளுங்கள் ✦AC இயக்கத்தில் இருக்கும்போது குறைந்த வேகத்தில் விசிறியை இயக்கினால், அறை விரைவாக குளிர்ச்சியடையும் ✦15 நாட்களுக்கு ஒரு முறை AC காற்று வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள் ✦டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்தாதபோது, முழுமையாக சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்.
News March 10, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வணிக <<19341813>>சிலிண்டர் <<>>விநியோகம் தடைபட்டதால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


