News March 24, 2025
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: கொதித்த இபிஎஸ்

<<15869033>>சவுக்கு சங்கரின்<<>> வீட்டிற்குள் ஒரு கும்பல் நுழைந்து சாக்கடையை வீசிய சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும், இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறிய இபிஎஸ், உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 26, 2025
ஏப்ரலில் அறிவிக்கப்படுமா அதிமுக – பாஜக கூட்டணி?

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற கேள்விக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு. இதில், கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்றும், பிரிந்து சென்றவர்களை சேர்க்க நிர்பந்திக்க மாட்டோம் என்றும் பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 26, 2025
விலையை உயர்த்தக்கூடாது: அமைச்சர் எச்சரிக்கை!

ஜல்லி, எம்சாண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறினார். தன்னிச்சையாக விலையை உயர்த்தினால் சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
News March 26, 2025
‘நேக்குப் போக்குடன்’ பதில் சொல்வது ஏன்? துரைமுருகன்

அத்திக்கடவு – அவிநாசி 2ஆம் கட்ட திட்டம் குறித்த கேள்விக்கு, பேரவையில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால், உறுதி செய்வது போல் ஆகிவிடும். அதனால்தான் ‘நேக்குப் போக்குடன்’ பதில் சொல்கிறோம் என்று துரைமுருகன் பதிலளித்துள்ளார். ஒரு திட்டத்தை செய்வதாக இருந்தால் கூட, செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதற்கு காரணம் இதுதான். MLAக்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.