News April 16, 2025
நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த சின்னதுரையை வேறு சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பழகிய சிலர், அவரை தனியாக வரவழைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னதுரை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பொறுப்பு?

தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
News November 26, 2025
43,84,40,00,000 ரூபாய்… அம்மாடியோவ்

கோவையில் இன்று நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் CM ஸ்டாலின் முன்னிலையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மொத்தம் ₹43,844 கோடி முதலீட்டில், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், 9 நிறுவனங்களில் பல பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.