News October 26, 2024
கெஜ்ரிவால் மீது தாக்குதல்?

டெல்லியில் பாத யாத்திரை சென்றபோது கெஜ்ரிவால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. விகாஸ்புரியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை சென்றபோது திடீரென புகுந்த கும்பல் ஒன்று அவரை தாக்கியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு கெஜ்ரிவாலை கொல்ல பாஜக முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
ரூபாய் நோட்டு அச்சிட இதெல்லாம் பாக்கணும்

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை பின்வரும் காரணிகள் அடிப்படையில் தான் கணக்கிட்டு அச்சடிக்கிறது: *பழைய நோட்டுகளை அகற்றுதல் *மாற்றீடு செய்யும் தேவை *இருப்பு தேவை *பொருளாதார வளர்ச்சி விகிதம் *உற்பத்தி விகிதம் *கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை தடுத்தல் *தங்கம் இருப்பு உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து, எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.
News July 8, 2025
முடிவுக்கு வரும் மாறன் சகோதரர்களின் பிரச்னை?

<<16753727>>மாறன் சகோதரர்களிடையேயான சொத்துப் பிரச்னையில்<<>> CM ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் நேரில் சந்தித்த அவர், ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் செயல்பட அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தம்பி தயாநிதி மாறனுக்கு கூடுதல் பங்குகளை விட்டுக்கொடுக்க கலாநிதி மாறன் முன்வந்திருக்கிறாராம். ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
News July 8, 2025
பாரத் பந்த்… பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்குமா?

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?