News October 1, 2024
தமிழகத்தில் 112 இடங்களில் ஏடிஎஸ் கொசுக்கள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் 112 இடங்களில் உற்பத்தியாவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபமாக இன்ப்ளுயன்ஸா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொசுக்கள், லார்வாக்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதனால் நோய் பரவலாகும் முன், தடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்கின்றனர்.
Similar News
News August 26, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை

செப்டம்பரில் பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறையாகும். செப். 5-ம் ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.26-ல் காலாண்டு விடுமுறை தொடங்குவதால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை. இதுதவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மூலம் 6 நாள்கள் லீவு கிடைக்கிறது. இதனால், மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஜாலியோ ஜிம்கானா தான்..!
News August 26, 2025
அமித்ஷா அடிக்கடி கூறியதால் சந்தேகம் வந்தது: ராகுல்

பாஜக 40- 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா அடிக்கடி கூறியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், முதலில் அது குஜராத்தில் தொடங்கி 2014-ல் தேசிய அளவில் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு திருட்டு தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவ தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News August 26, 2025
Beauty Tips: ₹3000 கிரீம் வேணாம்.. ₹10 படிகாரம் போதும்

அழகுக்காக தாத்தா காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் படிகாரம். இதில் உள்ள ஆண்டி-ஏஜெண்ட்கள் முகப்பரு, Open Pores, எண்ணெய் வடிதல் பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யுமாம் ▶முதலில் படிகாரத்தை பொடியாக அரைத்து, ரோஸ் வாட்டர் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் ▶இதனை முதலில் உங்கள் கையில் தடவி அலர்ஜி ஆகிறதா என சோதித்துப்பாருங்கள் ▶பிறகு முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். SHARE.