News March 30, 2025
ஏடிஎம் கட்டண உயர்வால் ஏழைகளுக்கு நெருக்கடி: CM

ATM பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ₹23ஆக உயர்த்துவது மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏழைகள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 10, 2026
பெண்களே, முகத்தில் முடி வளருதா? இதோ Solution!

பெண்களுக்கு முகத்தில் முடி இருப்பது இயற்கையானது. ஆனால், அது அதிகமாக இருப்பதை சிலர் விரும்புவதில்லை. இதை எளிதான முறையில், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நீக்கலாம். ➤குப்பைமேனி இலை, மஞ்சள், வேப்பிலை மூன்றையும் அரைத்து முகத்தில் தடவுங்கள் ➤அரை மணி நேரம் ஊற விட்டு, பின் கழுவ வேண்டும். ➤வாரத்திற்கு 2 முறை இதை செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடுமாம். SHARE THIS
News April 10, 2026
ஜன நாயகனில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா? அமீர்

கசித்திருக்கும் ஜன நாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தான் தங்களின் அரசியலா, எப்போது தான் மாறும் இந்த மனநிலை என அடுக்கடுக்கான கேள்விகளை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் எழுப்பியுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட் வைரலான நிலையில், ஓர் இயக்குநரே லீக்கான காட்சியை பார்த்தது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News April 10, 2026
PM KISAN திட்டத்தின் ₹2,000.. மகிழ்ச்சியான அப்டேட் வந்தது

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) ஜூன் இறுதி (அ) ஜூலை தொடக்கத்தில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, விவசாயி அடையாள எண் (UNIQUE FARMER ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பெறாதவர்களுக்கு ₹2,000 நிறுத்தப்படலாம். மாநில அரசின் <


