News March 13, 2025

அட்லீயின் டிமாண்ட்… எஸ்கேப்பான சன் பிக்சர்ஸ்!

image

அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு அட்லீ பெரிய பட்ஜெட்டை நீட்ட, சன் பிக்சர்ஸ் ஒதுங்கி விட்டதாம். அடுத்ததாக இப்படத்தை அல்லு அர்ஜுன், தில் ராஜுவிடம் எடுத்து செல்ல அட்லீ ₹100 கோடி சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே, அட்லீயின் குருவால் சுமார் ₹150 கோடி வரை இழந்த தில் ராஜூ, எப்படி மீண்டும் இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என யோசனையில் இருக்கிறாராம். சம்பளமே ₹100 கோடினா… பட்ஜெட் எவ்வளவு இருக்கும்?

Similar News

News March 4, 2026

விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

image

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். SHARE.

News March 4, 2026

ஓவர் ஸ்பீடு.. தோனிக்கே ஷாக்!

image

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பைக்கில் வேகமாக சென்றதற்காக Ex. கேப்டன் தோனிக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் தோனி, தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய பைக் கலெக்‌ஷனே வைத்திருக்கிறார். தோனியாக இருந்தாலும் விதிமீறலுக்கு அபராதம் விதித்ததை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News March 4, 2026

முதல்முறையாக இந்த Point-ஐ விஜய் பேசவில்லை..

image

இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும், TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவந்தார் விஜய். அத்துடன் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பலமுறை வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பாயிண்ட்டை தஞ்சை கூட்டத்தில் பேசாமல் ஸ்கிப் செய்திருக்கிறார் விஜய். இது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து?

error: Content is protected !!