News August 4, 2024
தெலுங்கு படத்தை இயக்கும் அட்லீ?

ஷாருக்கானை வைத்து இந்தியில் ‘ஜவான்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதை மல்ட்டி ஸ்டார் படமாக எடுக்க உள்ளதாகவும், இதற்கான கதை தேர்வில் அட்லீ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னதாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.
Similar News
News January 19, 2026
திமுகவை சீண்டிய காங்கிரஸ் MLA

2021-ல் எதிர்க்கட்சி(அதிமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கியபோதும் கூட ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் MLA ராஜேஷ்குமார் கூறியுள்ளார். ஆனால், இன்று காங்கிரஸ் வாக்குச்சாவடி அளவிலும், கிராம அளவிலும் பலமடைந்திருப்பதாக கூறிய அவர், அந்த அடிப்படையில்தான் அதிகமான சீட்டுகள் கேட்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதில் எந்தத் தவறும் இல்லையே எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 19, 2026
விஜய் பட நடிகையிடம் அத்துமீறிய நடிகர்.. பளார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி கேரவனில் நுழைந்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணலில் இதுபற்றி பேசிய அவர், கேரவனில் நுழைந்த நடிகர் எல்லை மீறி தன்னை தொட முயன்றபோது அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகர் மீண்டும் தன்னுடன் பணிபுரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
இயர்பட்ஸில் சத்தமா பாட்டு கேப்பீங்களா.. உஷார்!

ஒலி நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக, அதிக சவுண்ட் வைத்து, இயர்பட்ஸ்/ இயர்போன்களை பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. காதில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன: வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம். உள்காதில் உள்ள கோக்லியா ஒலி செய்திகளை மூளைக்கு அனுப்பும். அதிக ஒலி இதை பாதித்து, செவித்திறன் பிரச்னையை ஏற்படுத்தலாம். காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தே.


