News July 2, 2024
‘கல்கி 2898 ஏடி’ படக்குழுவை பாராட்டிய அட்லி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. மாய உலகத்தில் நிகழும் பிரமாண்ட காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. வெளியான 5 நாள்களில் உலகம் முழுவதும் ₹500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், அசாத்தியமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவை இயக்குநர் அட்லி மனதார பாராட்டியுள்ளார்.
Similar News
News September 21, 2025
விஜய் பேச்சு அனைத்தும் பொய்: ஆளூர் ஷாநவாஸ்

நாகை பரப்புரையின்போது விஜய் பேசியது அனைத்தும் பொய் என்று விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லாத விஜய், அண்ணாமலை, ஆர்.என்.ரவியை போன்று அவதூறு அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவதூறான இட்டுக்கட்டிய பொய்களையும், வாய்க்கு வந்ததையும் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக கொள்கையை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
USA-வில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

USA-வின் H-1B விசா பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், USA-வில் அவசர உதவி தேவைப்படும் இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண் அறிவித்துள்ளது. அவசர உதவிகள் தேவைப்பட்டால் மட்டும் +12025509931 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனவும் தகவல்களை விசாரிக்க ஃபோன் செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 21, 2025
தவெக கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறாரா டிடிவி?

NDA-வில் இருந்து வெளியேறிய தினகரன், தவெக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில், 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட வரும் தேர்தலில் விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்படி இவர், விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது, தவெகவுடனான கூட்டணி அச்சாரமாக பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?