News October 26, 2024
இரவில் அறைக்கு அழைத்தனர்… பிரபல நடிகை பகீர்

இரவில் தங்களது அறைக்கு வருமாறு ஹீரோக்கள் அழைத்ததாக ஹிந்தி நடிகை மல்லிகா செராவத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மர்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் படப்பிடிப்புக்காக துபாய் சென்றபோது, அந்தப்பட ஹீரோ தனது அறை கதவை தட்டியதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, ஹிந்தி ஹீரோக்கள் சிலர் இரவில் அவர்களின் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

*திருமணமாகாத பெண்களும் குழந்தையை தத்தெடுக்கலாம். *நிறுவனங்கள் 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய கட்டாய மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும். *யாரேனும் Stalking செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை. *பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால், உடனடி இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். *மாஜிஸ்திரேட் அனுமதி இல்லாமல், ஒரு பெண்ணை இரவிலோ, அதிகாலையிலோ கைது செய்ய முடியாது. *ஒரு ஆண் போலீஸ், ஒரு பெண்ணை உடல்ரீதியாக பரிசோதிக்க கூடாது.
News January 23, 2026
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 23, 2026
PM மோடி அவர்களே! டாட்டா பை பை!! ஜோதிமணி

NDA பொதுக்கூட்டத்தில் காங்., மற்றும் திமுகவை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்ததற்கு ஜோதிமணி MP பதிலடி கொடுத்துள்ளார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாஜகவும், மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்கென்ன வேலை.. டாட்டா பை பை! என்று விமர்சித்துள்ளார்.


