News September 24, 2024
விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில், நள்ளிரவில் ஒருசில பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகின்றன. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Similar News
News August 11, 2025
ஆடி மாதம் முடிவதற்குள் இதை மட்டும் பண்ணிடுங்க

ஆடி மாத வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆடியில் வரும் திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்தும் சிறப்புக்குரிய விரத நாள்களாக இருக்கிறது. எனவே, ஆடி முடிய இன்னும் 5 நாள்களே இருப்பதால், ஒரு முறையாவது குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால், வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள், பண நெருக்கடிகள் ஆகியவை குறையும். அதோடு உங்களின் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை.
News August 11, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪திருப்பூர் ₹950 கோடி <<17367738>>நலத்திட்டங்கள்<<>>.. தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்
✪MPக்களுக்கு புதிய <<17368231>>குடியிருப்புகள்<<>>.. திறந்து வைத்த PM மோடி
✪தங்கம் <<17367134>>விலை <<>>₹560 குறைவு.. சவரனுக்கு ₹75,000 விற்பனை
✪ஆசிய <<17365716>>கோப்பையை <<>>இந்தியா வெல்லும்.. கங்குலி நம்பிக்கை ✪1M+ <<17367519>>டிக்கெட்<<>>.. கரியரின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்
News August 11, 2025
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் CM ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு CM ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இம்மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களை சந்திப்பதுடன் தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.