News April 21, 2025
பிறந்த நாள் கொண்டாட பூமிக்கு வந்த விண்வெளி வீரர்!

நாசாவின் மூத்த வீரர் டான் பெட்டிட் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் கடந்தாண்டு அக்டோபரில் அவர் விண்வெளிக்குச் சென்றார். சக ரஷ்ய வீரர்களுடன் விண்கலத்தில் பூமி திரும்பிய அவர், கஜகஸ்தான் அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினார். விமானம் மூலம் அவரை அமெரிக்கா அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
ஊழல் ஆட்சியை நிச்சயம் தோற்கடிப்போம்: பியூஷ்

NDA கூட்டணியில் அமமுக இணைந்தது தனிப்பட்ட முறையில் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். Ex CM ஜெயலலிதாவின் தலைமையில் TN முதன்மை மாநிலமாக இருந்ததாக கூறிய அவர், அவர்கள் வழங்கிய நல்லாட்சியை NDA கூட்டணி வழங்கும் என்றார். மேலும், ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News January 21, 2026
முன்னாள் எம்எல்ஏ காலமானார்

காங்., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், EX MLA-வுமான வெள்ளியணை ராமநாதன் (91) உடல்நலக்குறைவால் காலமானார். 1957-ல் கருணாநிதி வென்ற குளித்தலை தொகுதியில், 1962 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26 வயதில் MLA-ஆக தேர்வானவர். காங்., கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவரின் மறைவுக்கு ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 21, 2026
முன்பதிவில் மாஸ் காட்டும் ‘மங்காத்தா’

வரும் ஜன.23-ல் ரீ-ரிலீசாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்பதிவு தொடங்கிய நிலையில், பல தியேட்டர்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் கண் இமைக்கும் நேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன. முன்பதிவில் மட்டும் இதுவரை ₹1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘மங்காத்தா’ ரீ-ரிலீசிற்கு நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா?


