News October 14, 2025

இன்று முதல் 4 நாள்களுக்கு சட்டசபை கூட்டம்

image

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள், கரூர் துயரத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை முதல் 2025-26-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 14, 2025

அதிமுகவுடன் கூட்டணி.. புதிய முடிவு எடுத்தார்!

image

DMDK பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் LK சுதீஷின் தாயார் அம்சவேணி கடந்த வாரம் காலமான நிலையில், சுதீஷ் வீட்டிற்கு நேரில் சென்ற SP வேலுமணி ஆறுதல் கூறினார். மேலும், அம்சவேணியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், 20 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வலியுறுத்தியதோடு விரைவாக முடிவை அறிவிக்குமாறும் SP வேலுமணி கூறியதாக தெரிகிறது.

News October 14, 2025

போனை இப்படி நோண்டிட்டு இருக்கீங்களா.. உஷார்!

image

மேலே உள்ள படத்தில் இருப்பதை போல, போனை யூஸ் செய்வோரை பார்த்திருப்போம். ஆனால், இது எவ்வளவு டேஞ்சர் என உங்களுக்கு தெரியுமா? இப்படி கழுத்தை சாய்த்தபடி போனை நோண்டி கொண்டே இருந்ததால், ஜப்பானின் 25 வயது இளைஞர் ஒருவர் ‘Drop Head Syndrome’ என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் தற்போது தலையை நேராகவே வைக்க முடியாவில்லையாம். வருங்காலத்தில் இது பெரிய பிரச்னையாக மாறலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News October 14, 2025

இந்தியா, PM மோடியை புகழ்ந்த டிரம்ப்!

image

இந்தியா சிறந்த நாடு, PM மோடி எனது சிறந்த நண்பர் என காஸா அமைதி உச்சி மாநாட்டில் டிரம்ப் புகழாரம் சூட்டினார். மேலும், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் இருவரும் நன்றாக வாழப்போகிறார்கள் என தான் நினைப்பதாகவும், தன்னை பொறுத்தவரை இருநாட்டு தலைவர்களும் சிறந்தவர்கள் என பாக்., PM ஷெபாஸ் ஷெரிப்பையும் புகழ்ந்தார். டிரம்ப்பின் பாக்., ஆதரவு பேச்சுக்கு ஆதரவு & எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!