News June 21, 2024
காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: மோடி

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்து, ஜனநாயகத்தின் வெற்றியை உறுதி செய்ததாகக் கூறிய அவர், வாக்குகள் வாயிலாக அவர்கள் விரும்பும் புதிய மாநில அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்றார். காஷ்மீரில் நிரந்தரமாக அமைதி நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Similar News
News September 12, 2025
மோசமான தோல்வியில் அனுஷ்கா

‘வேட்டைக்காரன்’ தொடங்கி ‘பாகுபலி’ வரை தேவசேனாவாக தமிழ், தெலுங்கு படங்களில் கோலோச்சியவர் அனுஷ்கா. இந்நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காட்டி’ படம், இதுவரை ₹7.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ₹50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் விமர்சனமும் பாசிட்டிவாக இல்லை. எனவே, இது அவரது கரியரில் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. அனுஷ்கா கம்பேக் கொடுப்பாரா?
News September 12, 2025
ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

விழுப்புரம், திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு ராமதாஸின் ஆதரவாளர்கள் பூட்டு போட முயன்றதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அன்புமணியை கட்சியில் இருந்து நேற்று ராமதாஸ் நீக்கிய நிலையில், வரும் 17-ம் தேதி இந்த அலுவலகத்தில் அன்புமணி கொடியேற்ற திட்டமிட்டிருந்தார்.
News September 12, 2025
அட! PAN Card எண்ணுக்கு இதுதான் அர்த்தமா..

PAN CARD-ல் வரும் முதல் 3 எழுத்துகள் தானியங்கி முறையில் உருவாக்கப்படும். ➤இதில் வரும் 4வது எழுத்து ’P’ என்றால் அது தனிநபருடைய கார்டு எனவும், ’C’ என்றால் நிறுவனத்தின் கார்டு எனவும் அர்த்தம். ➤உங்கள் பெயரின் முதல் எழுத்து 5வது எழுத்தாக இடம்பெறுகிறது. ➤அடுத்து வரும் 4 எண்கள் சீரியல் எண்களாகும். ➤இறுதியாக வரும் எழுத்து, ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் தனித்துவமான எழுத்தாகும். SHARE.