News April 12, 2024
இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆசிய வங்கி புது கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7%ஆக இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி முன்பு கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த விகிதத்தை 7%ஆக தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி 7.2%ஆக இருக்குமென்றும் அந்த வங்கி கணித்துள்ளது.
Similar News
News November 13, 2025
BREAKING: டாஸ்மாக் அறிவித்தது

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. TN-ல் 4,787 டாஸ்மாக் கடைகளில், 25,000-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், வரும் 16-ம் தேதி தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
News November 13, 2025
பாமக பிரச்னைக்கு இதுதான் தீர்வு: பாமக பாலு

G.K.மணி உள்ளிட்டோர் ராமதாஸை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஜி.கே.மணியும், அருளும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் போதும், பாமகவில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
TET தேர்வுக்கான ஹால்டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு வரும் 15-ம் தேதியும், தாள்-2 தேர்வு 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமாக ஹால்டிக்கெட்டின் பாஸ்வேர்டை மறந்தவர்கள், OTP எண் மூலம் அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்.


