News September 26, 2025
ஆசிய கோப்பை: இந்தியாவின் Playing XI இதுதான்

ஆசிய கோப்பையில் இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியில் பும்ரா மற்றும் துபே ஆகியோருக்கு <<17839620>>இந்திய அணியில்<<>> ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளனர். Playing XI: அபிஷேக் ஷர்மா, கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.
Similar News
News January 17, 2026
முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை : மூர்த்தி

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை தரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். ஏற்கெனவே அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேறாதபோது, CM-ன் இந்த அறிவிப்பு எப்படி சாத்தியம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் பேசிய மூர்த்தி, CM உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும், முக்கிய துறைகளில் வீரர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
சற்றுமுன்: 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

ரஷ்யாவின் நோவோகுஸ்னெட்ஸ்க் பகுதியில் உள்ள பிரபல ஹாஸ்பிடலில் 9 குழந்தைகள் பிறந்து சிலமணி நேரங்களிலேயே அடுத்தடுத்த சில நாள்களில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஹாஸ்பிடலை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீஸார் விசாரித்ததில், டாக்டர்களின் கவனக்குறைவே இறப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை டாக்டர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News January 17, 2026
தேர்தலில் போட்டியிடலாமா? குழப்பத்தில் இருந்த திமுக!

தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக, கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தது தெரியுமா? 1956-ல் திருச்சியில் 2வது மாநில மாநாடு நடந்தது. அதில் திமுக தேர்தலில் பங்கேற்பது குறித்து 2 வாக்கு பெட்டிகள் அமைத்து தொண்டர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் 1957 தேர்தலில் முதல்முறையாக திமுக போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது.


