News August 30, 2025

ஆசிய கோப்பை தொடர்: போட்டி நேரம் மாற்றம்

image

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர், செப்.9-ல் தொடங்கி செப்.28 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இரவு 7:30 மணிக்கு பதிலாக 8:00 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி, செப்.10-ல் முதல் அணியாக ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

Similar News

News August 31, 2025

ஜெலன்ஸ்கியின் நம்பிக்கை நாயகனாக மாறிய மோடி

image

புடினை மோடி சந்தித்து பேச உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் அவருடன்(Modi) தொலைபேசியில் பேசியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஜெலன்ஸ்கி மோடியிடம் எடுத்துரைத்திருப்பார் என தெரிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள மோடி புடின் உள்பட பல நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். போரை நிறுத்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என மோடி ஏற்கெனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 31, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 444
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

News August 31, 2025

CM வேட்பாளர்! ராகுலுக்கு ஷாக் கொடுத்த தேஜஸ்வி

image

பிஹாரில் தேர்தல் அலை வீசி வரும் நிலையில் அங்கு இந்தியா கூட்டணியின் CM வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவித்துக் கொண்டார். நிதிஷ் குமார் தன்னை காப்பி அடித்து திட்டங்களை நிறைவேற்றுதாக பேரணியில் பேசிய அவர், உங்களுக்கு Orginal CM வேண்டுமா? Duplicate CM வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!