News September 12, 2025
ஆசிய கோப்பை: இன்று பாக். Vs ஓமன்

ஆசிய கோப்பை தொடரில் இன்று குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதுகின்றன. அணியில் பாபர், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லையென்றாலும் ஓமனை வீழ்த்தும் திறன் பாகிஸ்தானிடம் உள்ளது. எனவே, இந்த போட்டி One sided-ஆக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவை எதிர்கொள்ளும் முன்பாக இந்த மோதலை பயிற்சி ஆட்டமாக பாக். கருதும். அபு தாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Similar News
News September 12, 2025
டெட் தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்

டெட் தேர்வுக்கு சுமார் 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில் போட்டி போட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை, இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெட் தேர்வு நவ.15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவுள்ளது.
News September 12, 2025
செப்டம்பர் 12: வரலாற்றில் இன்று

*1832 – தமிழ் பதிப்புத்துறை முன்னோடி தாமோதரம் பிள்ளை பிறந்தநாள். *1959 – சோவியத் ஒன்றியம் ஏவிய லூனா 2 விண்கலம் சந்திரனை அடைந்தது. *1960 – வைகை புயல் வடிவேலு பிறந்தநாள். *1968 – நடிகை அமலா பிறந்தநாள். *1989 – கௌதம் கார்த்திக் பிறந்தநாள். *2010 – பாடகி ஸ்வர்ணலதா மறைந்த நாள். *2015 – மத்திய பிரதேசம், பெட்லாவாத் நகரில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழப்பு.
News September 12, 2025
பிக்பாஸ் சீசன் 9: முதல் எபிசோட் எப்போது?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி விஜய் சேதுபதி புதிதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றி காட்டுவார் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு அக்.5 ஞாயிறு அன்று கூமாபட்டி தங்கபாண்டியன், பால சரவணன், சதீஷ் கிருஷ்ணன், ஷபானா, உமர், உட்பட 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்ல இருக்கின்றனராம்.