News September 27, 2025

சூப்பர் ஓவருக்கு சென்ற இந்தியா – இலங்கை போட்டி

image

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதலி ஆடிய இந்தியா 202 ரன்களை குவித்தது. வழக்கம் போல் அபிஷேக் சர்மா அதிரடியாக தொடக்க கொடுக்க, இறுதியில் திலக், சஞ்சு இலங்கை பந்து வீச்சை பதம் பார்த்தனர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து சதம் அடித்தார். அவர் ஆட்டம் இழந்த பின் இந்தியா பக்கம் மேட்ச் வந்தாலும் இறுதியில் டிராவில் முடிவடைந்தது.

Similar News

News January 1, 2026

தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்யக் கூடாது என கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் ரேஷன் கடைகளை சாராத நபர்கள் பொங்கல் பரிசு டோக்கனை வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு என CM ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

News January 1, 2026

2026-ல் களமிறங்கும் எலக்ட்ரிக் கார்கள்

image

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. 2025-ல் அதிக கார்களை விற்ற மாருதி நிறுவனம், முதல்முறையாக எலக்ட்ரிக் காரை சந்தையில் இறக்குகிறது. இதனால், எலக்ட்ரிக் கார் சந்தை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல 2026-ல் சந்தைக்கு வரவுள்ள கார்களை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க.

News January 1, 2026

சபரிமலை தங்கம் திருட்டில் வெளியான திடுக்கிடும் தகவல்

image

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில், கொல்லம் கோர்ட்டில் SIT தாக்கல் செய்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முக்கிய குற்றவாளியான <<18345270>>உன்னிகிருஷ்ணன்<<>> தங்கத்தை 4.5 கிலோ தாமிரமாக மாற்றியதாகவும், சென்னையில் ரசாயனங்கள் மூலம் தங்கம் உருக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!