News August 19, 2025

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

image

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அக்சர் படேல், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் யாரை மிஸ் பண்ணுறீங்க?

Similar News

News August 19, 2025

தவெக மாநாடு.. சைலண்ட்டாக கலாய்த்த தமிழிசை

image

தவெக 2-வது மாநாடு ஆக.21-ல் நடைபெறவுள்ளது. இது பற்றி தங்கள் கருத்து என்ன என தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, து.ஜனாதிபதி விஷயத்தில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது எனவும், தவெகவே எப்போதாவது தான் அவர்களை பற்றி யோசிக்கிறார்கள். இதில் நாங்கள் யோசிக்க என்ன இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

News August 19, 2025

வங்கி கடன் வசதி.. அவசர தேவைக்கு இதை பண்ணுங்க!

image

Overdraft Against Salary வசதி மூலம் வங்கிகள் அவசர கடன் வழங்குகின்றன. இதனை பெற SALARY ACCOUNT இருந்தாலே போதும். உங்கள் மாத சம்பளத்தை பொறுத்து ஒரு குறிப்பிட்ட கடன் வரம்பை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன. இதனை EMI-ஆக கட்ட வேண்டியதில்லை. குறைந்த வட்டி என்பதால், பணம் இருக்கும்போது செலுத்தலாம். HDFC, AXIS, ICICI உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்குகின்றன. முக்கியமான விஷயம் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும்.

News August 19, 2025

FLASH: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

image

‘நாங்க மூனு பேரும் சாகப்போறோம்’ என நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு பிள்ளைகளுடன் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர், பண்ருட்டியில் குடும்ப பிரச்னையில் ராஜா(40), அவரது மகன் குமரகுரு(12), தன்யஸ்ரீ(7) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர். மூவரது உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுகின்றனர். தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 என்ற எண்ணை அழையுங்கள்.

error: Content is protected !!