News May 23, 2024
ப்ளே-ஆஃப் சுற்றில் அஷ்வின் படைத்த சாதனை

ப்ளே-ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 2ஆவது வீரர் எனும் பெருமையை அஷ்வின் (21 விக்கெட்) பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியில், 2 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ப்ளே-ஆஃப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ (28) முதலிடத்திலும், மோகித் சர்மா (20) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News September 1, 2025
MP-க்களுக்கு விருந்தளிக்கும் PM மோடி

செப்.9-ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கு முந்தைய நாளான செப்.8-ல் NDA கூட்டணி MP-க்களுக்கு PM மோடி இரவு விருந்து வைக்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையான பிணைப்புடன் செயல்படுவர் என்றும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் NDA கூட்டணி சார்பில் CP ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணியில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
News September 1, 2025
Porsche எங்கே? லலித் மோடியிடம் கேட்ட யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்கின் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்ஸர்களை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. இந்த ஆட்டத்துக்கு முன்பு, ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பவர்களுக்கு Porsche கார் பரிசு என அப்போதைய IPL ஆணையர் லலித் மோடி அறிவித்துள்ளார். இந்த இலக்கை அடைந்ததுமே, கிரவுண்டில் இருந்தே ‘Porsche எங்கே’ என யுவராஜ் கேட்டாராம். பின்னர், 6 சிக்ஸர்களை விளாசிய பேட்டை பெற்ற லலித், அவருக்கு காரை பரிசாக வழங்கினாராம்.
News September 1, 2025
புத்தர் பொன்மொழிகள்

*எதையும் மாற்றும் சக்தி, காலத்திற்கு மட்டுமல்ல, உன் சொல்லுக்கும் உண்டு.
*எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள், ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே.
*வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே.
*இவ்வுலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ‘ஆசை’ மட்டுமே.
*எதை நீ அதிகம் விரும்புகிறாயோ, அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்.