News December 20, 2024

சேப்பாக்கம் மைதானத்தில் விரைவில் அஸ்வின் பெயர்

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் இணைச் செயலாளர் பாபா தெரிவித்துள்ளார். அதேபோல, CSK அகாடமியில், அஸ்வின் பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக CSK CEO காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும், CSK அகாடமியை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 2, 2025

கொலை செய்யப்பட்டவர் ரீல்ஸில் வந்த அதிசயம்!

image

2017-ல் திருமணமான நிலையில், ஒரே வருடத்தில் கணவர் காணாமல் போகிறார். பெண் குடும்பத்தினர் தான் அவரை கொன்று விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 7 ஆண்டுகள் கழித்து, ரீல்ஸில் வேறொரு பெண்ணுடன் கணவர் இருப்பதை பார்த்துள்ளார் மனைவி. வரதட்சணை புகார் அளித்ததால், கணவர் அப்போது எஸ்கேப்பாகி விட்டார். இச்சம்பவம் உ.பி.யின் ஹர்தோயில் நிகழ்ந்துள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News September 2, 2025

இந்தியாவுக்கு எதிரான தொடர்: பேட் கம்மின்ஸ் விலகல்!

image

முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் நியூசிலாந்து & இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு Lumbar bone stress பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் நவம்பரில் தொடங்கும் ஆஷஸ் தொடரிலும் விளையாடுவது சந்தேகமாகி இருக்கிறது. இந்திய அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸி.க்கு எதிராக 3 T20, 5 ODI போட்டிகளில் விளையாடவுள்ளது.

News September 2, 2025

ஊழியர்களின் பக்கம் திமுக நிற்பதில்லை: அண்ணாமலை

image

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அண்ணாமலை சாடியுள்ளார். சுமார் 2,000 தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படப் போவதில்லை என தெரிவித்த அவர், எனினும் திமுகவுக்கு அதனை பரிசீலிக்க மனமில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!