News March 16, 2025
தமிழ் மொழியை புகழ்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சென்னை அருகே பண்ணூரில் பேசிய அவர், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
Similar News
News March 16, 2025
ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வருமா?

ஆண்டுதோறும் புனித மாதமாகிய ரம்ஜானில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஒரு மாத நோன்பிற்கு பிறகு பிறை தெரிந்ததும் உற்சாகமாக ரம்ஜானை கொண்டாடி மகிழ்வர். ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வரவும் வாய்ப்புள்ளதாம். 2030ம் ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களில் ரம்ஜான் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன், 1965, 1997 ஆகிய ஆண்டுகளில் 2 ரம்ஜான் கொண்டாடப்பட்டுள்ளதாம்.
News March 16, 2025
1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையம் ஏன்? இபிஎஸ்

உதவி லோகோ பைலட் தேர்வுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசை இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது சாதாரண காரியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி உதவி லோகோ பைலட் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
டெங்குவால் பள்ளி மாணவி மரணம்

வேலூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மாணவி சிவானி (13) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.