News August 29, 2024

‘இம்பேக்ட்’ விதிக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்

image

IPL கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ‘இம்பேக்ட்’ விதிமுறை மோசமானதல்ல என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “வியூகங்களை அமைக்கவும், களத்தில் புதுமைக்கான வாய்ப்பையும் ஏற்படுத்த ‘இம்பேக்ட்’ விதி உதவுகிறது. அது ஆல்-ரவுண்டர்களை ஊக்குவிப்பதில்லை என்ற கருத்தில் துளியும் உண்மையில்லை. அவர்களை யாரும் தடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

Similar News

News August 20, 2025

கூலி படத்தில் மாற்றம்.. ஐகோர்ட் புதிய உத்தரவு

image

கூலி படத்திற்கு U/A சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூலி படத்திற்கு A சான்று வழங்கியதால் 18 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், KGF, பீஸ்ட் படங்களில் அதிக வன்முறை காட்சிகள் இருந்தும் U/A சான்று வழங்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. வழக்கின் விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

WhatsApp யூஸர்கள் இத உடனே பண்ணுங்க..

image

டேட்டா திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், WhatsApp பயனர்கள், இந்த பாதுகாப்பு அம்சங்களை உடனே ஆன் செய்து வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
◆WhatsApp-ல் Settings-> Chats-> Backup-ல் ‘End-To-End Encryption’-ஐ ஆன் செய்யவும்
◆Personal Chat-களுக்கு ‘Chat Lock’-ஐ ஆன் செய்யவும்.
◆Settings-> Account-> Two-step verification-ஐ ஆன் செய்யவும். இது வேறு Device-ல் Login செய்யும் போது, OTP கேட்கும்.

News August 20, 2025

FLASH: சீமானுக்கு புதிய சிக்கல்

image

2024-ல் ஆண்டு நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் மேல்முறையீட்டு வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாலியல் புகார், அனுமதியின்றி பேரணி, IPS அதிகாரிக்கு எதிரான அவதூறு என பல வழக்குகள் உள்ள நிலையில், தற்போது சீமானுக்கு இந்த வழக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!