News September 3, 2025
Big Bash League தொடரில் அஸ்வின்?

சமீபத்தில் IPL தொடரில் இருந்து விலகிய அஸ்வின், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், Big Bash League தொடரில் அவர் விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, IL தொடரில் பங்கேற்பதற்கான ஏலத்திற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் அஸ்வினின் கவனம் என தெரிகிறது. முன்னதாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
Similar News
News September 3, 2025
முதுகு வலியை விரட்டும் ‘மயூராசனம’

☆தோள்பட்டை, முழங்கை எலும்புகள் வலுப்பெற்று, முதுகுத்தண்டு பலமாகும்.
➥முதலில், முழங்காலிட்டு, கைகளை முன்னோக்கி வைத்து குனியவும்.
➥அடுத்து, முழங்கைகளை தரையில் ஊன்றி, கால்களை தரையில் பதித்து, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும்.
➥இந்த நிலையில், 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 3, 2025
மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? அமைச்சர் பதில்

2021 திமுக தேர்தல் வாக்குறுதிகளில், மாதந்தோறும் மின் கணக்கீடும் உண்டு. ஆனால், தற்போது வரை 2 மாதங்களுக்கு ஒரு முறையே மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் நெருங்கும் சூழலில், மிக விரைவாக பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 3, 2025
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் சிங்கப்பூர் PM

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் 3 நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். இந்தியா, சிங்கப்பூர் இடையேயான தூதரக உறவின் 60-ம் ஆண்டு நிறைவையொட்டி வோங் இந்தியா வந்துள்ளார். PM மோடியை சந்திக்க உள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, விண்வெளி உள்பட 5 துறைகளில் ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளார். முன்னதாக FM நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.