News May 27, 2024
‘தக் லைப்’ படத்தில் அசோக் செல்வன்?

‘தக் லைப்’ படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்புகள் ஏதுமின்றி பதிவிட்டுள்ளார். அதில், “அந்த உண்மையான மறக்க முடியாத நாள்களில் அற்புதங்கள் நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஓசூர் மாநகராட்சி – ஆர்.வி.அரசு மேல்நிலை பள்ளி
✅ ஓசூர் மாநகராட்சி – ஆச்சுவாஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரிங்க் ரோடு
✅ ஊத்தங்கரை – அரசு உயர்நிலை பள்ளி, நாய்க்கனுர்
✅ தளி – அரசு உயர்நிலைப் பள்ளி, தக்கட்டி
✅ காவேரிப்பட்டினம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நரிமேடு (SHARE IT)
News September 17, 2025
பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.
News September 17, 2025
டிரம்ப் ஆதரவாளர் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை?

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட டைலர் ராபின்சன் மீது கொலை உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைலரை சுட்டுக் கொல்லும் வகையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<<17683928>> சார்லியை<<>> கடந்த 10-ம் தேதி பொதுவெளியில் வைத்து டைலர் சுட்டுக் கொன்றார்.