News March 4, 2025
ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2025
பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்

மும்பை அணியின் Ex கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் (84) உடல்நலக்குறைவால் காலமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 20 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடியவர். குறிப்பாக 1972இல் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி பட்டம் வெல்ல உதவியவர். மும்பை கிரிக்கெட் ஒரு உண்மையான ஜாம்பவானை இழந்துவிட்டது என MCC தலைவர் அஜிங்க்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

சிறுநீரில் உள்ள சில ரசாயனங்கள் வெளியே செல்வதற்குப் பதிலாக உடலில் தங்கி, அவை படிமங்களாக மாறி பின்னர் கற்களாக மாறுகின்றன. மேலும், அசைவம் அதிகமாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினாலும் கல் உண்டாகலாம். அத்துடன் தூக்கமின்மை, லேட்டாக சாப்பிடுவது, வைட்டமின் B6, C, D குறைபாடுகளுடன் உடல் பருமன் இருப்பவர்களுக்கும் கிட்னியில் கல் ஏற்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!
News March 4, 2025
இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு உயர்வு

கடந்த 2014ல் ₹35 லட்சம் கோடியாக இருந்த இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு, 2024 இறுதியில் ₹82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 8.90% சராசரி வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் சில்லரை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது, வருங்காலங்களில் மேலும் வேகமாக உயரும் என்றும், 2034ம் ஆண்டுக்குள் இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு ₹1.90 லட்சம் கோடியை எட்டும் எனவும் கணித்துள்ளது.